Menu

2021-06-26

லெமன் சாதம் Lemon rice, How to make lemon rice

 லெமன் சாதம் 

அனைவருக்கும் பிடித்த, சுவையான எலுமிச்சை சாதம் ( Lemon rice ) ஈசியாக செய்யும் முறை : 

லெமன் சாதம் Lemon rice, How to make lemon rice
 Lemon rice, How to make lemon rice

தேவையான பொருட்கள் :

அரிசி                   = 1 கிலோ 
எலுமிச்சம்பழம் = 10 பீஸ் 
கடலை பருப்பு  = 50 கிராம் 
உளுத்தம் பருப்பு = 50 கிராம் 
முந்திரி                 = 100 கிராம் 
கருவேப்பிலை = சின்ன கொத்து 
பச்சைமிளகாய் = 4 பீஸ் 
கடுகு                     = 50 கிராம் 
மஞ்சள் தூள்     = 1/2 ஸ்பூன் 
எண்ணெய்       = தேவையான அளவு 
வேர்க்கடலை  = 100 கிராம் 

செய்முறை : 1 

                        முதலில் அரிசியை நல்ல பதத்தில் சாதமாக வடித்து வைக்கவும். எலுமிச்சை பழங்களை சாறு பிழிந்து எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறியதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதனுடன் கடலை பருப்பு, முந்திரி, வேர்க்கடலை மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். 

செய்முறை : 2 

                            இவை வதங்கியதும், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போடவும். பிறகு இதனுடன் எலுமிச்சை சாறை சேர்த்து கலக்கவும். நன்கு கொதிக்கவிட்டு எண்ணெய் தனியே பிரிந்ததும் கீழே இறக்கி, ஏற்க்கனவே வடித்துவைத்த சாதத்தில் ஊற்றி நன்கு கிளறவும், இந்த கலவை அனைத்து சாதத்திலும் படும்படி கிளறி பரிமாறலாம். 

                            இப்போது சுவையான எலுமிச்சை சாதம் Lemon rice ) தயார் !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly