இட்லி சாம்பார் ( Idli sambar )
இட்லி, தோசைக்கு சுவையான சாம்பார் ( Idli sambar ) ஈசியாக செய்யும் முறை :
சின்ன வெங்காயம் = 1/2 கப்பு
பச்சைமிளகாய் = 4 பீஸ்
பருப்பு = 1 கப்பு
முருங்கைக்காய் = 4 பீஸ் ( துண்டு )
தக்காளி = 2 பீஸ்
உப்பு = தேவையான அளவு
கடுகு, உளுந்து = 1 ஸ்பூன்
பெருங்காய தூள் = சிறிதளவு
கருவேப்பிலை = 1 சின்ன கொத்து
கொத்தமல்லி தழை = 1 சின்ன கொத்து
கத்திரிக்காய் = 1 பீஸ்
உருளை கிழங்கு = 1 பீஸ்
வேரமிளகாய் = 2 பீஸ்
புளி = சிறிய உருண்டை
செய்முறை : 1
முதலில் பருப்பை வேகவைத்து மசித்து வைக்கவும். பின் காய்கறிகளை தேவைக்கு ஏற்ப்ப துண்டுகளாக நறுக்கி வைக்கவும். புளியை கரைத்து புளிக்கரைசல் தயாராக வைக்கவும். வேகவைத்த பருப்புடன் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், முருங்கைக்காய், உருளை கிழங்கு, கத்திரிக்காய் ஆகியவற்றை சேர்த்து வேகவைக்கவும்.
செய்முறை : 2
காய்கறிகள் வெந்ததும், புளிக்கரைசலை ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கடுகு, உளுந்து, வரமிளகாய், பெருங்காய தூள் சேர்த்து தாளித்து கொதிக்கும் சம்பாரில் போட்டு கிளறவும். இறுதியில் சாம்பாரை அடுப்பிலிருந்து இறக்கி, கருவேப்பிலை, கொத்தமல்லி தழை கிள்ளிபோட்டு பரிமாறலாம்.
இப்போது சுவையான இட்லி சாம்பார்( Idli sambar ) ரெடி !!! இந்த சாம்பார் இட்லி, தோசை, பொங்கலுக்கு அருமையாக இருக்கும்.
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...