Menu

2021-06-05

காஞ்சிபுரம் இட்லி Idli recipe

 காஞ்சிபுரம் இட்லி ( Idli recipe )

சாதாரண இட்லி போல இல்லாமல் கொஞ்சம் வித்யாசமாக சாப்பிட காஞ்சிபுரம் இட்லி செய்யலாம் வாங்க :

காஞ்சிபுரம் இட்லி Idli recipe
 Idli recipe

தேவையான பொருட்கள் : 

புழுங்கரிசி                 = 1 கப்பு 
பச்சரிசி                        = 1 கப்பு 
உளுத்தம் பருப்பு     = 1 கப்பு 
உப்பு                               = தேவையான அளவு 
நெய்                               = 10 கிராம் 
தயிர்                              = 3 ஸ்பூன் 
முந்திரி                        = 10 பீஸ் 
சீரகம்                           = 1 ஸ்பூன் 
மிளகு                           = 1 ஸ்பூன் 
இஞ்சி                           = 1 துண்டு 

செய்முறை : 1 
        
            முதலில் அரிசியையும் பருப்பையும் 2 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து வைக்கவும். அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். கரைத்த மாவை 1 இரவு முழுவதும் வைத்திருக்கவும். 

செய்முறை : 2 

                  மறுநாள் காலையில் 3 ஸ்பூன் தயிர் சேர்க்கவும்.  கடாயில் நெய் விட்டு, நெய் காய்ந்ததும் அதில் மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை வருக்கவும், வறுத்தவற்றை மாவில் கொட்டி கலக்கவும், தேவையெனில் நெய் சேர்க்கலாம். இந்த மாவை இட்லி பானை தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும். 

                    இப்போது சுட சுட காஞ்சிபுரம் இட்லி ( Idli recipe ) தயார் !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly