கொய்யா பழத்தின் நன்மைகள்( Guava fruit benefits )
விலை மலிவாக கிடைக்கும் கொய்யா பழத்தில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன,பழங்களில் கொய்யா பழத்திற்க்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு,அதன் பண்புகளை கீழே காண்போம்.
1) கொய்யா காய்களை தினமும் சாப்பிடுவதால், அதில் உள்ள கசப்புதன்மை சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
2) இதில் உள்ள நார்ச்சத்து, மனிதனின் கழிவு மண்டலம் சரியாக இயங்க உதவுகிறது.
3) கொய்யா பழத்தில் நார்ச்சத்து,தாதுப்புகள், விட்டமின்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக விட்டமின்- A, விட்டமின் -C, போலிக் ஆசிட், விட்டமின் B1,B2,B3 ஆகியவையும் உள்ளது.
4) கொய்யா இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது, ரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது. சாப்பிடும் முன் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவதால் கொழுப்பு அளவு 8 லிருந்து 9 புள்ளிகள் வரை குறையும்.
5) கொய்யா இலை சாறு குடிப்பதால் மாதவிடாய் சமயத்தில் ஏற்ப்படும் வலியின் அளவு குறைகிறது. கொய்யா இலை சாறு கருப்பை பிடிப்பை போக்க உதவுகிறது.
6) எடை குறைக்க விரும்புவர்கள் கொய்யா பழம் எடுத்துக்கொண்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
7) கொய்யா நோய்எதிர்ப்பு மண்டலத்தை பாராமரிப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது.
8) கொய்யா இலை சாறை நேரடியாக முகத்தில் பயன்படுத்துவதால் அது முகப்பரு உண்டாக்கும் பாக்டீரியா வை கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
( Guava fruit benefits ) கொய்யா இலை மற்றும் சாறை தொடர்ந்து பயன்படுத்துவதால் இதயம், செரிமான மண்டலம், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...