Menu

2021-06-26

முட்டை சாதம் Egg rice, Eggs fried rice recipe in tamil

 முட்டை சாதம் 

கடை டேஸ்ட் ல், வீட்டிலேயே எக் ரைஸ் ( Egg rice ) ஈசியாக செய்யும் முறை :

முட்டை சாதம் Egg rice, Eggs fried rice recipe in tamil
Egg rice, Eggs fried rice recipe in tamil 

தேவையான பொருட்கள் : 

முட்டை                         = 6 பீஸ் 
பிரியாணி அரிசி  = 1/4 கிலோ 
முட்டை கோஸ்        = 100 கிராம் 
உப்பு                             = தேவையான அளவு 
எண்ணெய் ( அல்லது )
நெய்                             = தேவையான அளவு 
வெங்காயம்            = 1 பெரிய பீஸ் 
குடைமிளகாய்      = 2 பீஸ் 
மிளகுதூள்               = 1 ஸ்பூன் 
கொத்தமல்லி தழை = 1 சின்ன கொத்து 
கருவேப்பிலை      =  1 சின்ன கொத்து 
கேரட்                          = 100 கிராம் 

செய்முறை : 1 

                        முதலில் பிரியாணி அரிசியை வேகவைத்து  முக்கால் பதத்தில் சாதமாக  வடித்து வைக்கவும். காய்கறிகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.முட்டையை அடித்து மிளகுதூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் முட்டை கலவையை தோசை போல ஊற்றி இருபுறம் வெந்ததும் சிறிய தூண்டுகளாக்கி தனியாக எடுத்து வைக்கவும். 

செய்முறை : 2 

                            பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் ஊற்றி கேரட், முட்டை கோஸ், குடை மிளகாய் போட்டு வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வேகவைத்த சாதத்தை இதனுடன்  சேர்த்து இறுதியில் வேகவைத்த முட்டை துண்டுகளையும் சேர்த்து நன்கு கிளறி, அப்படியே சில நிமிடங்கள் வைக்கவும். சாதம் மற்றும்  அனைத்து பொருட்களும் வெந்ததும் இறக்கி பரிமாறலாம். 

                        இப்போது சுவையான முட்டை சாதம் Egg rice ) ரெடி !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly