Menu

2021-06-26

முட்டை போண்டா Egg bonda, Egg curry recipe

 முட்டை போண்டா ( Egg curry recipe )

சிற்றுண்டிக்கு முட்டையை வைத்து சுலபமாக முட்டை போண்டா ( Egg bonda ) செய்யும் முறை : 

முட்டை போண்டா Egg bonda, Egg curry recipe
 Egg bonda, Egg curry recipe 

தேவையான பொருட்கள் : 

முட்டை                   = 4 பீஸ் 
உப்பு                        = தேவையான அளவு 
எண்ணெய்          = தேவையான அளவு 
கடலை மாவு       = 1 கப்பு 
பேக்கிங் சோடா = 1/2 ஸ்பூன் 
பச்சரிசி  மாவு     = 2 ஸ்பூன் 
மிளகாய் தூள்      = 1 1/2 ஸ்பூன் 
மஞ்சள் தூள்          = 1/2 ஸ்பூன் 

செய்முறை : 1 

                முதலில் முட்டையை தண்ணீரில் வேகவைத்து, தோலை உடைத்து, சுத்தம் செய்து  தனியாக எடுத்து வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பேக்கிங் சோடா, பச்சரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கரைத்து பஜ்ஜி மாவு பதத்தில் தயாராக வைக்கவும். 

செய்முறை : 2 

                   கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் வேகவைத்துள்ள முட்டையை ஒவ்வொன்றாக  பஜ்ஜி மாவில் முழுவதும் பிரட்டி, எண்ணெயில் போட்டு நன்கு பொரித்தெடுக்கவும். (முட்டையை முழுதாகவோ அல்லது இரண்டாகவோ  நறுக்கி பயன்படுத்தலாம்) . இந்த பஜ்ஜி மாவில் முட்டைக்கு பதிலாக வாழைக்காய், உருளை கிழங்கு, பெரிய வெங்காயம், விருப்பமேனில் மேரி பிஸ்கட் கூட பயன்படுத்தலாம்.

                            இப்போது சுவையான முட்டை போண்டா Egg bonda,Egg curry recipe ) சுட சுட ரெடி !!!        



Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly