Menu

2021-05-18

வாழைப்பூ வடை Recipes with banana flower vada in tamil

 வாழைப்பூ வடை

வாழைப்பூவை பயன்படுத்தி எளிமையாக வடை ( Recipes with banana flower )செய்யும் முறை : 

வாழைப்பூ வடை Recipes with banana flower vada in tamil
 Recipes with banana flower vada in tamil

தேவையான பொருட்கள் :

  1. வாழை பூ                             = 1 பீஸ் 
  2. துவரம் பருப்பு                 = 100 கிராம் 
  3. கடலை பருப்பு                 = 100 கிராம் 
  4. பெரிய வெங்காயம்     = 1 பீஸ் 
  5. தேங்காய் துருவல்        = 1 கப்பு 
  6. மஞ்சள் தூள்                     = 1/2 ஸ்பூன் 
  7. காய்ந்த மிளகாய்          = 6 பீஸ் 
  8. சோம்பு                                = 1/2 ஸ்பூன் 
  9. சீரகம்                                   = 1/2 ஸ்பூன் 
  10. உப்பு                                     = தேவையான அளவு 
  11. எண்ணெய்                       = தேவையான அளவு 
செய்முறை : 1 

                முதலில் கடலை பருப்பு,துவரம் பருப்பு இரண்டையும் தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். வாழைப்பூவை சுத்தம் செய்து, மிக்ஸியில் நன்றாக அரைத்து வைக்கவும். 

செய்முறை : 2 

                ஊறிய 2 பருப்பையும் கிரைண்டர் ல் அரைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு பொர பொரவென அரைத்து வைக்கவும், இதனுடன் அரைத்த வாழைப்பூவை சேர்த்து கலக்கவும். 

செய்முறை : 3 

                 இந்த கலவையுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும். கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கிளறி வைத்த வடை மாவை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 

                    இப்போது சூடான, சத்தான வாழைப்பூ வடை  ( Recipes with banana flower ) ரெடி !!!


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly