கருணை கிழங்கு வறுவல்
இணை உணவுக்கு கருணை கிழங்கு வைத்து ஈசியாக வறுவல் ( Karunai kilangu fry ) செய்யும் முறை :
தேவையான பொருட்கள் : Karunai kilangu fry
எண்ணெய் = தேவையான அளவு
உப்பு = தேவையான அளவு
புளி = ஒரு சிறிய உருண்டை
மிளகாய் தூள் = 2 ஸ்பூன்
தனியா தூள் = 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன்
செய்முறை : 1
முதலில் கருணை கிழங்கை சுத்தம் செய்து, நன்றாக வேகவைத்து அதன் தோலை உரித்து வைக்கவும். வேகவைத்த கிழங்கை தேவைக்கேற்ப்ப வட்ட துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
செய்முறை : 2
புளியை கொஞ்சம் கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும், அனைத்து பொருட்களும் நன்கு கலந்ததும், நறுக்கிவைத்த கிழங்கு துண்டுகளை இந்த கலவையில் நன்கு புரட்டி எடுத்து தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் வேகும் வரை வைத்து எடுக்கவும்.
இப்போது ருசியான கருணைகிழங்கு வறுவல் ( Karunai kilangu fry ) ரெடி !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...