Menu

2021-05-18

கேரட் பால் கீர் How to make carrot juice recipe of carrot juice

 கேரட் பால் கீர் 

கேரட் மற்றும் பசும் பாலை பயன்படுத்தி ஆரோக்யமான கேரட் பால் கீர் செய்யும் முறை ( How to make carrot juice recipe of carrot juice )

கேரட் பால் கீர் How to make carrot juice recipe of carrot juice
 How to make carrot juice recipe of carrot juice

தேவையான பொருட்கள் :

கேரட்                        = 1/4 கிலோ 
பசும் பால்             = 1 லிட்டர் 
முந்திரி                   = 10 பீஸ் 
பாதாம்                    = 10 பீஸ் 
சர்க்கரை                = 3/4 கப்பு 
ஏலக்காய் தூள்    = 1/2 ஸ்பூன் 
பச்சை கற்பூரம்   = 1/4 ஸ்பூன் 

செய்முறை : 1 

              முதலில் கேரட் இன் தோலை சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். நறுக்கிய கேரட் தூண்டுகளுடன் முந்திரி, பாதாம் மற்றும் 1 கப்பு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து 2 விசில் வரை வைத்து இறக்கவும். 

செய்முறை : 2 

                        இறக்கியவற்றை சிறிது நேரம் ஆற வைத்து,   பாதாமை எடுத்து  தோலை உரித்து விடவும், பின்னர் பாதாம், முந்திரி, கேரட் இவை மூன்றையும் விழுதாக அரைத்து வேக வைத்த தண்ணீரில் கலந்து வைக்கவும். 

செய்முறை : 3 

                          பசும் பாலை நன்றாக  கொதிக்க வைத்து பாதியாக வற்றும் நிலை வந்ததும், கலந்து வைத்திருக்கும் விழுது கலவையை சேர்க்கவும், இதனுடன் சர்க்கரை சேர்த்து 10 நிமிடம் வரை கொதிக்க வைத்து இறக்கிவிடவும், இறக்கியதும் ஏலக்காய் தூள், பச்சை கற்பூரம் சேர்த்து நன்றாக கலந்து ஆற வைக்கவும். ஆறியதும் ஃபிரிஜ்ல் வைத்து ஜில்லென பரிமாறலாம். 

                                இப்போது சத்தான சுவையான ( carrot juice recipe ) கேரட் பால் கீர்  தயார் !!!     


Share this post 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly