பாதாம் பால்
சூடான பாதாம் கீர் அல்லது குளிர்ந்த பாதாம் பால் எளிமையாக
செய்யும் முறை ( Badam milk recipe )
செய்யும் முறை ( Badam milk recipe )
தேவையான பொருட்கள் :
பசும் பால் = 1 லிட்டர்
சர்க்கரை = 1/2 கப்பு
பாதாம் = 25 பீஸ்
ஏலக்காய் தூள் = 1/2 ஸ்பூன்
முந்திரி = 10 பீஸ்
குங்கும பூ = 1 சிட்டிகை
செய்முறை : 1
முதலில் தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் 15 பாதாம் பீஸ் யை போட்டு 15 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி பாதாமை தனியாக எடுக்கவும். எடுத்த பாதாம் ன் தோலை உரித்து வைக்கவும். தோல் உரித்த பாதாம் வுடன் கொஞ்சம் பால் மற்றும் முந்திரியை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து விடவும். மீதம் உள்ள பாதாம் மற்றும் முந்திரியை மெல்லியதாக சீவி துண்டுகளாக மாற்றவும்.
செய்முறை : 2
அடுப்பில் பாலை வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும், பால் நன்றாக கொதித்ததும்,அரைத்து வைத்த பாதாம்,முந்திரி, பால் கலவையை சேர்க்கவும், இதனுடன் 1/2 கப்பு சர்க்கரையும் சேர்த்து மீண்டும் 10 நிமிடம் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.
செய்முறை : 3
இறக்கிய பாதாம் பாலுடன் ஏலக்காய் தூள்,குக்கும பூ, மெல்லியதாக சீவி வைத்த முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும், பாதாம் கீர் வேண்டுமெனில் அப்படியே சூடாக பருகலாம். பாதாம் பால் வேண்டுமெனில் இதனை ஆற வைத்து ஃபிரிஜ் ல் வைத்து குளிர்ச்சியாக பருகலாம்.
இப்போது சுவையான, சத்தான பாதாம் பால், பாதாம் கீர் ( Badam milk recipe ) தயார் !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...