Menu

2021-05-17

உளுந்து வடை medhu vadai in tamil

 உளுந்து வடை

கடை டேஸ்ட் ல் வீட்டிலேயே மெது வடை ( உளுந்து வடை ) ( medhu vadai ) எளிமையாக செய்யும் முறை 

உளுந்து வடை medhu vadai in tamil
medhu vadai in tamil
தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு   =  1/2 கிலோ 
எண்ணெய்    = தேவையான அளவு 
உப்பு                  = தேவையான அளவு 
வெங்காயம்          = 8 பெரிய பீஸ் 
பச்சை மிளகாய் = 10 பீஸ் 
கருவேப்பிலை   = 1 சின்ன கொத்து 
கொத்தமல்லி தழை = 1 சின்ன கொத்து 
மிளகு                      = 1 கைப்பிடி 
இஞ்சி                     = 1 பெரிய பீஸ் 

செய்முறை : 1 

     முதலில் உழுந்தை 1/2 மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.வெங்காயம்,  பச்சைமிளகாய், இஞ்சி ஆகிய வற்றை சிறு  துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

செய்முறை : 2 

       ஊற வைத்த உளுந்தை கிரைண்டரில் ஆட்டவும், ஆட்டும் போது உப்பு சேர்த்தும் மற்றும் தண்ணீர் சேர்க்காமலும்  ஆட்டவும்.பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை,
கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக பிசையவும்.

செய்முறை : 3 

    பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும் பிசைந்து வைத்த உளுந்து கலவையின் ஒரு கைப்பிடி அளவு எடுத்து தட்டையாக்கி நடுவில் விரலால் ஓட்டை செய்து எண்ணெ யில் போடவும். நன்றாக சிவந்து பொறிந்ததும் எடுக்கவும். 

     இப்போது சுவையான டீ கடை ஸ்டைல் (Medhu vadai) உளுந்து வடை ரெடி !!!



Share this post  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly