ஜவ்வரிசி வடை
![]() |
Javvarisi vadai in tamil |
ஜவ்வரிசி = 1 கப்பு
உப்பு = தேவையான அளவு
எண்ணெய் = தேவையான அளவு
உருளை கிழங்கு = 2 பீஸ்
நிலக்கடலை = 100 கிராம்
பச்சைமிளகாய் = 3 பீஸ்
கொத்தமல்லி = 1 சின்ன கொத்து
எலுமிச்சை சாறு = 2 ஸ்பூன்
அரிசி மாவு = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
எண்ணெய் = தேவையான அளவு
உருளை கிழங்கு = 2 பீஸ்
நிலக்கடலை = 100 கிராம்
பச்சைமிளகாய் = 3 பீஸ்
கொத்தமல்லி = 1 சின்ன கொத்து
எலுமிச்சை சாறு = 2 ஸ்பூன்
அரிசி மாவு = 2 ஸ்பூன்
செய்முறை : 1
முதலில் ஜவ்வரிசியை 3 லிருந்து 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.உருளை கிழங்கை தனியாக குக்கரில் வேக வைத்து எடுத்து வைக்கவும். நிலக்கடலையை தோலை நீக்கி மிக்ஸியில் பொடியாக அரைத்து வைக்கவும்.
செய்முறை : 2
பாத்திரத்தில் ஊற வைத்த ஜவ்வரிசியை போட்டு அதனுடன் வேக வைத்த உருளை கிழங்கின் தோலை நீக்கி சேர்த்து பிசைய வும் இதில் நிலக்கடலை பொடி,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்,கொத்தமல்லி,எலுமிச்சை சாறு,அரிசி மாவு,மற்றும் உப்பு சேர்க்கவும்.
செய்முறை : 3
இதில் தண்ணீர் கலக்காமல் நன்றாக பிசையவும். பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் , பிசைந்த மாவு கலவையை தட்டையாக செய்து எண்ணெயில் நிறம் மாறும் வரை பொரித்து எடுக்கவும்.
இப்போது சுவையான (Javvarisi vadai) ஜவ்வரிசி வடை தயார் !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...