வெஜிடபிள் பிரியாணி
![]() |
Vegetarian Briyani seivadhu eppadi in tamil |
இஞ்சி பூண்டு பேஸ்ட் = 1 ஸ்பூன்
எண்ணெய் = 2 ஸ்பூன்
நெய் = 1 ஸ்பூன்
பட்டை = 1 பீஸ்
கிராம்பு = 2 பீஸ்
ஏலக்காய் = 3 பீஸ்
பிரிஞ்சி இலை = 1 பீஸ்
மிளகு = 10 பீஸ்
சீரகம் = 1 ஸ்பூன்
புதினா = 1 கட்டு
மல்லி தழை = 1 கட்டு
உப்பு = தேவையான அளவு
மிளகாய்த்தூள் = 1 1/2 ஸ்பூன்
மீள் மேக்கர் = 50 கிராம்
கேரட் = 1/4 கிலோ
பீன்ஸ் = 1/4 கிலோ
உருளைகிழங்கு = 1/4 கிலோ
பச்சை மிளகாய் = 2 பீஸ்
தக்காளி = 3 பீஸ்
பெரிய வெங்காயம் = 2 பீஸ்
முதலில் அரிசியை கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்,மீள் மேக்கர் இல் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்ததும் கீழே இறக்கி தண்ணீரை வடிகட்டி மீள் மேக்கர் யை தேவையான அளவில் துண்டுகளாக நறுக்கவும்.மிளகு சீரகத்தை பொடியாக அரைகக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் துண்டுகளாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை எண்ணெயில் போட்டு வதக்கவும்,பிறகு பட்டை,கிராம்பு,ஏலக்காய் ,பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்,இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும.
இவை வதங்கியதும் கேரட்,பீன்ஸ்,உருளை கிழங்கு, தக்காளி,மீள் மேக்கர் ஆகியவற்றையும் சேர்த்து பிரட்டவும்.இவற்றுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய்த்தூள் கலந்து லேசாக கிளறவும்.இப்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிளகு சீராக பொடியை சேர்க்கவும்.
இப்போது குக்கரில் உள்ள பொருட்களுடன் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்க்கவும் பிறகு கொஞ்சம் புதினா,மல்லி தழையை தூவி மொத்த உணவு கலவையையும் லேசாக கிளறி விடவும். முடிவில் குக்கரை மூடி நன்றாக வேகும் வரை 3 அல்லது 4 விசில் வரும் வரை வைக்கவும்.
பிரியாணி தயாரானதும் பரிமாறும் பாத்திரத்தில் வைத்து,வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் தயிர் சேர்த்து வெங்காய பச்சடியுடன் பிரியணியை பரிமாறலாம். இப்போது சுவையான (Vegetarian Briyani) வெஜிடபிள் பிரியாணி தயார் !!!
காளான் பிரியாணி Mushroom Biriyani Recipe in tamil
தேங்காய் சாதம் Coconut rice in tamil
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...