Menu

amazon.in

2021-03-08

இறால் பிரியாணி Shrimp food in tamil

 இறால் பிரியாணி

இறால் பிரியாணி ( Shrimp food in tamil ) அருமையாக செய்து அசத்தலாம் வாங்க : 


சிக்கன் பிரியாணி South indian chicken briyani recipe in tamil
இறால் பிரியாணி Shrimp food in tamil

தேவையான பொருட்கள் :

மஞ்சள் தூள்              = 1 ஸ்பூன் 

இறால்                           = 1/2 கிலோ 

பாஸ்மதி அரிசி      = 2 கப்பு 

சோம்பு தூள்             = 1 ஸ்பூன் 

மல்லிதழை               = 1 கட்டு 

புதினா                        = 1 கட்டு 

இஞ்சிபூண்டு விழுது = 1 ஸ்பூன் 

கரி  தூள்                     = 1 ஸ்பூன் 

தக்காளி                     = 1 பீஸ் 

தயிர்                            = 1 ஸ்பூன் 

பட்டை                        = 1 ஸ்பூன் 

மிளகாய்த்தூள்     = 1/2 ஸ்பூன் 

பச்சை மிளகாய்  = 3 பீஸ் 

பெரிய வெங்காயம் = 2 பீஸ் 

பிரியாணி மசாலா  = 1/2 ஸ்பூன் 

அன்னாசி பூ         = 1/2 பீஸ் 

ஏலக்காய்               = 3 பீஸ் 

உப்பு                         = தேவையான அளவு
 
பிரியாணி இலை  = 2 பீஸ் 

எண்ணெய்             = 3 ஸ்பூன் 

இலவங்கம்             = 3 பீஸ் 
                                                                        
சிக்கன் பிரியாணி South indian chicken briyani recipe in tamil
இறால் பிரியாணி Shrimp food in tamil

செய்முறை : 1 

                                    பாஸ்மதி அரிசியை 1/2 மணி நேரம் தண்ணீரில்  ஊற வைக்க வேண்டும்,மசாலா பொருட்களை அரைத்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அதனை சுத்தம் செய்து வைத்துள்ள இறால் ல் பூசி நன்றாக 1 மணி நேரம் ஊற வைக்கவும். பெரிய வெங்காயம்,தக்காளி,பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். 


செய்முறை : 2 

                                      பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் தாளிக்கவும்,நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து வதக்கவும்,வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது,பச்சை மிளகாய்,தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.இதனுடன் இறால் ஐ சேர்த்து லேசாக பிரட்டவும். 


செய்முறை : 3 

                                    இப்போது மஞ்சள் தூள், சொம்புதூள்,கொஞ்சம் தயிர், பட்டை, மிளகாய் தூள், கரிதூள் ,பிரியாணி மசாலா,ஏலக்காய்,உப்பு தேவையான அளவு,அன்னாசி பூ,இலவங்கம் ஆகியவை சேர்த்து கிளறவும் .இப்போது 2 கப்பு அரிசி ல் 3 1/2 வரை தண்ணீர் சேர்த்து மொத்த உணவு கலவையை யும் குக்கரில் வைக்கவும்.    


செய்முறை : 4 

            இறுதியாக புதினா,மல்லி தழை கொஞ்சம் சேர்த்து நன்றாக கிளறி விட்டு குக்கரை மூடி நன்றாக வேகும் வரை 3 அல்லது 4 விசில் வைக்கவும்.


                                      பிரியாணி ரெடி ஆனதும் பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து வைத்து முந்திரி,திராட்சை, புதினா,கொத்தமல்லி தழை போன்ற பொருட்களை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்,இப்போது சுவையான (Shrimp food) இறால் பிரியாணி ரெடி! ரெடி!! ரெடி!!!

                                  

சிக்கன் பிரியாணி South indian chicken briyani recipe in tamil
இறால் பிரியாணி Shrimp food in tamil


Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly

Featured Post

மாம்பழ கேசரி Kesari Sweet, Mango Kesari In Tamil,How To Make Kesari Recipe

மாம்பழ கேசரி முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், இதில் சுவை மட்டுமல்லாமல், எண்ணற்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லோரும் விரும்பி சாப்பிடும் மாம்ப...