Menu

2021-03-13

காளான் பிரியாணி Mushroom Biriyani Recipe in tamil

 காளான் பிரியாணி 

காளான் பிரியாணி  Mushroom Biriyani Recipe in tamil
  Mushroom Biriyani Recipe in tamil
தேவையான பொருட்கள் :

காளான்                  = 1/2 கிலோ 
பிரியாணி அரிசி = 2 கப்பு 
உப்பு                         = தேவையான அளவு 
தண்ணீர்                = தேவையான அளவு 
கிராம்பு                  = 5 பீஸ் 
லவங்கம்               = 2 பீஸ் 
ஏலக்காய்             = 3 பீஸ் 
பெரிய வெங்காயம் = 1 பீஸ் 
தக்காளி               = 2 பீஸ் 
இஞ்சி பூண்டு பேஸ்ட் = 2 ஸ்பூன் 
கொத்தமல்லி   = 1 சின்ன கட்டு 
புதினா                 = 1 சின்ன கட்டு 
பச்சை மிளகாய் = 3 பீஸ் 
எண்ணெய்         = 3 ஸ்பூன் 
நெய்                     = 3 ஸ்பூன் 
தேங்காய்ப்பால் = 1/2 கப்பு 
தயிர்                   = 2 ஸ்பூன் 
மிளகாய்த்தூள் = 2 ஸ்பூன் 
மல்லித்தூள்     = 2 ஸ்பூன் 
சொம்புதூள்    = 1/2 ஸ்பூன் 
மஞ்சள்தூள்      = 1/2 ஸ்பூன் 
பிரியாணி இலை = 1 ஸ்பூன் 


செய்முறை : 1

                                    பிரியாணி அரிசியை 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்,காலானை  நன்றாக சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.வெங்காயம்,தக்காளி,கொத்தமல்லி,பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். 

செய்முறை : 2 

                                        அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றவும்,எண்ணெய் காந்ததும் ஏலக்காய்,லவங்கம்,கிராம்பு,பிரியாணி இலை ஆகியவற்றை எண்ணெயில் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து பொன் நிரமாகும் வரை வதக்கவும். 

செய்முறை : 3 
                                        இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,தக்காளி,கொத்தமல்லி,புதினா,நறுக்கிய பச்சைமிளகாய் யும் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.இவை அனைத்தும் வதங்கியதும்,காளாணை பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள் தேங்காய்ப்பால்,தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். 

செய்முறை : 4 

                                    குக்கரை அடுப்பில் வைத்து சூடேற்றி, ஊற வைத்த அரிசியை வடிகட்டி குக்கரில் போடவும் பிறகு அதனுடன் பாத்திரத்தில் வதக்கிய  அனைத்து பொருட்களையும் குக்கரில் போட்டு 3 கப்பு தண்ணீரை ஊற்றி எல்லாவற்றையும் நன்றாக கலந்து பிரட்டி விடவும்,அரிசியின் மேல் பகுதியில் 3 ஸ்பூன் நெய் ஊற்றி லேசாக கிளறவும்,இறுதியில் குக்கரை மூடி உணவு நன்றாக வேகும் வரை குக்கரில் விசில் வைக்கவும். 

                                                பிரியாணி தயாரானதும் அதனை பரிமாறும் பாத்திரத்தில் வைத்து அலங்கரித்து,பச்சடியுடன் பரிமாறலாம், இப்போது சூடான சுவையான (Mushroom Biriyani) காளான் பிரியாணி ரெடி !!!

மஷ்ரூம் சாலட் Mushroom recipes

Share this post

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly