சிக்கன் குழம்பு
![]() |
Chicken kulambu in tamil |
நல்லெண்ணெய் = தேவையான அளபவு
உப்பு = தேவையான அளவு
சின்ன வெங்காயம் = 20 பீஸ்
இஞ்சி பூண்டு பேஸ்ட்= 2 ஸ்பூன்
தக்காளி = 2 பெரிய பீஸ்
மஞ்சள் தூள் = 1 ஸ்பூன்
மிளகாய் தூள் = 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் = 5 பீஸ்
சீரகம் = 1 ஸ்பூன்
சோம்பு = 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் = 1 சின்ன கப்பு
கசகசா = 1 ஸ்பூன்
பட்டை = 1 பீஸ்
கிராம்பு = 4 பீஸ்
கடுகு = 1 ஸ்பூன்
செய்முறை : 1
சிக்கன் யை கழுவி சுத்தம் செய்து வைக்கவும், வெங்காயம், தக்காளி,பச்சைமிளகாய் சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
செய்முறை :2
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பட்டை,கிராம்பு, கச கசா,சீரகம்,சோம்பு,ஆகியவற்றை போட்டு வறுத்து எடுக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்கவும்.ஆறிய பிறகு அத னுடன் பச்சை மிளகாய்,தேங்காய் துருவல்,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து தனியாக வைக்கவும்.
செய்முறை : 3
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி,எண்ணெய் காய்ந்ததும் கரு வேப்பிலை,கடுகு,போட்டு தாளிக்கவும்,நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கவும்,இதனுடன் சிக்கன் யை சேர்த்து மிளகாய் தூள்,மஞ்சள் தூள் தூவி நன்றாக பச்சை வாசம் போகும் வரை வத கக்கவும்.
செய்முறை : 4
இறுதியாக தக்காளியை சேர்த்து,ஏற்கனவே அரைத்து வைத் துள்ள மசாலாவை கலந்து தேவையான அளவு உப்பு மற்றும் தண் ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்,சிக்கன் மற்றும் அனைத்து பொருட்களும் வேகும் வரை நன்றாக கொதிக்க விடவும்.சிக்கன் வெந்தவுடன் கீழேஇறக்கி வேறுபாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்
இப்போது சுவையான நம்ம (chicken kulambu) சிக்கன் குழம்பு ரெடி !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...