காலிபிளவர் குழம்பு
![]() |
Cauliflower recipes in tamil |
தேவையான பொருட்கள் :
காலி பிளவர் = 1 பெரிய பீஸ்
உப்பு = தேவையான அளவு
மஞ்சள்தூள் = 1 ஸ்பூன்
கருவேப்பிலை = 1 சின்ன கட்டு
கொத்தமல்லி தழை = 1 சின்ன கட்டு
தக்காளி = 1 பெரிய பீஸ்
கடுகு = 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
சின்ன வெங்காயம் = 7 பீஸ்
சீரகம் = 1 ஸ்பூன்
சோம்பு = 1 ஸ்பூன்
பட்டை = 2 பீஸ்
கிராம்பு = 4 பீஸ்
வரமிளகாய் = 3 பீஸ்
தனியா = 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் = 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் = 1/4 கப்பு
செய்முறை : 1
முதலில் காலிபிளவர்யை நன்கு சுத்தம்செய்து கழுவவும்
தண்ணீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வைத்து அதில் காலிபிளவர்யை அலசிபோட்டு கொஞ்சநேரம்ஊறவைக் கவும்.பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்
அதில் சோம்பு,சீரகம்உளுத்தம்பருப்பு,பட்டை,கிராம்பு,தனியா,வர மிளகாய்,தானிய,சின்னவெங்காயம்,கருவேப்பிலை ஆகியவை
சேர்த்து வதக்கவும்.
செய்முறை : 2
வதக்கிய பொருட்களை சிறிது நேரம் ஆர வைத்துஅதனுடன் தேங்காய் துருவல் இஞ்சி பூண்டு பேஸ்ட்சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த உடன் பொடியாக நறுக்கிய தக்காளி,கடுகு சேர்த்து வதக்கவும்.
செய்முறை : 3
இப்போது கொதிக்கவைத்த தண்ணீரில்உள்ள காலிபிளவர்இன் தண்ணீரைவடிகட்டி அதனை குக்கரில் வதக்கிய பொருட்களுடன்
சேர்த்து நன்றாக கிளறவும்.பிறகு தேவையான அளவு தண்ணீர்
மற்றும் உப்பு போட்டு குக்கரைமூடி 3 அல்லது 4 விசில் வரும்வரை
வேக வைக்கவும்.
குழம்பு தயார் ஆனதும் கொத்தமல்லிதழை தூவி பரிமாறவும் இப்போது சுவையான (Cauliflower recipes) காலிபிளவர் குழம்பு தயார் !!!
வாழைப்பூ குழம்பு Banana flower in tamil
தக்காளி குழம்பு Thakkali kulambu seivadhu eppadi in tamil
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...