வாழைப்பூ குழம்பு
தேவையான பொருட்கள் :
வாழைப்பூ = 1 கப்பு
புளி = 1 ஸ்பூன் அளவு
சோம்பு = 1/2 ஸ்பூன்
சீரகம் = 1/2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
அரிசி மாவு = 1 ஸ்பூன்
கடலை மாவு = 1/2 கப்பு
கடுகு = 1 ஸ்பூன்
வெந்தயம் = 1/2 ஸ்பூன்
தானிய தூள் = 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் = 1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் = 1 பெரிய பீஸ்
தக்காளி = 2 பீஸ்
பூண்டு = 1 பீஸ்
மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன்
புளி = 1 ஸ்பூன் அளவு
சோம்பு = 1/2 ஸ்பூன்
சீரகம் = 1/2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
அரிசி மாவு = 1 ஸ்பூன்
கடலை மாவு = 1/2 கப்பு
கடுகு = 1 ஸ்பூன்
வெந்தயம் = 1/2 ஸ்பூன்
தானிய தூள் = 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் = 1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் = 1 பெரிய பீஸ்
தக்காளி = 2 பீஸ்
பூண்டு = 1 பீஸ்
மஞ்சள் தூள் = 1/2 ஸ்பூன்
செய்முறை : 1
முதலில் வாழைப்பூவை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்யவும்,
வெங்காயம்,தக்காளி யை நறுக்கி வைக்ககவும்.புளியை 1 கப்பு தண்ணீரில் கரைத்து புளிக்கரைசல் தயார் செய்யவும். வாழைப் பூவை நீராவியில் வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
செய்முறை : 2
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதில் கடலை மாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள் மற்றும் தேவையானஅளவு உப்பு சேர்த்து கலந்து மாவு போல தயார் செய்யவும்,பிறகு அதில்
வேக வைத்து எடுத்த வாழைப்பூவை போட்டு பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும்.
செய்முறை : 3
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும்
சோம்பு,சீரகம்,கடுகு,வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பிறகு வெங்காயம்,தக்காளி,பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.இதனுடன் புளிக்கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்கவைக்கவும்.
செய்முறை : 4
பின் இதில் தனியா தூள்,மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், உப்பு
மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க
வைத்து இறக்கி, இறுதியாக எண்ணெயில் பொரித்து எடுத்த வாழைப் பூவை சேர்த்து கிளறவும்.
இப்போது சத்தான(Banana flower) வாழைப்பூ குழம்பு தயார் !!!
Share this post
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thanks for your comments,come again...