Menu

2021-02-27

காடை பிரியாணி Kaadai Briyani recipe in tamil

 காடை பிரியாணி 

                                                                 
காடை பிரியாணி Kaadai Briyani recipe  in tamil
 Kaadai Briyani recipe  in tamil
   
                                                        
 தேவையான பொருட்கள் :

மஞ்சள் தூள்                 = 1 ஸ்பூன் 
தயிர்                                   = 50 மில்லி 
காடை                              = 4 பீஸ் 
கிராம்பு                            = 4 பீஸ் 
நெய்                                    = 50 மில்லி 
ஏலக்காய்                           = 2 பீஸ் 
எண்ணெய்                       = 100 மில்லி 
மிளகாய் தூள்                 = 1 ஸ்பூன் 
உப்பு                                    = தேவையான அளவு 
கொத்தமல்லி தலை  = 50 கிராம் 
இஞ்சி                                 = 1 பீஸ் 
பூண்டு                               = 1 பீஸ் 
பிரியாணி அரிசி       = 3/4 கிலோ (750 கிராம்)
பெரிய வெங்காயம் = 150 கிராம் 
தேயங்காய்ப்பால்     = 100 மில்லி 
தக்காளி                          =100 கிராம் 
பட்டை                               = 2 பீஸ் 
பச்சைமிளகாய்          = 5 பீஸ்
பிரிஞ்சி இலை            = 1 பீஸ் 
புதினா இலை             = 50 கிராம் 
பிரியாணி மசாலா  = தேவையெனில் 
அன்னாசி பூ                 = 1 ஸ்பூன் 
முந்திரி                            = 12 பீஸ் 
கருவேப்பிலை             = 50 கிராம் 
மிளகு சீரகம்                  = 2 ஸ்பூன் 
                                                            
காடை பிரியாணி Kaadai Briyani recipe  in tamil
 Kaadai Briyani recipe  in tamil

செய்முறை : 1

                                   சுத்தம் செய்து வைத்துள்ள  காடையில் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு மற்றும் தயிர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும், மிளகு சீரகம் யை பொடியாக அரைத்து வைக்கவும் வெங்காயம் தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்,அரிசியை தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

செய்முறை : 2

           குக்கரில் எண்ணெய்,நெய் ஊற்றி சூடேற்றவும் இவை சூடேறியதும் அதில் பட்டை,பிரிஞ்சி இலை,கிராம்பு,அன்னாசி பூ,ஏலக்காய்,முந்திரி ஆகியவை சேர்த்து 1/2 நிமிடம் வதக்கவும்,பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயம்,தக்காளி,யை இதனுடன் சேர்க்கவும் இவற்றை 5 நிமிடம் வரை வதக்கவும்,கடைசியாக புதினா,மல்லி இலை மற்றும் கருவேப்பிலையை போடவும்.

செய்முறை : 3 

                                                 நன்கு ஊறிய காடையை எடுத்துஒருமுறை லேசாக கழுவி பின்  குக்கரில் உள்ள பொருட்களுடன் போட்டு 5 நிமிடம் வரை பிரட்டி எடுக்கவும்,இதில் இஞ்சி பூண்டு யை பேஸ்ட் ஆக்கி சேர்த்து வதக்கவும்,பிறகு தயிர் ஊற்றி மிளகு சீராக பொடியை தூவி கிளறவும் இதனுடன் மிளகாய் தூள்,மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து லேசாக கிளறவும். 

செய்முறை : 4 

                    10 நிமிடம் கழித்து ஊறவைத்த அரிசியை குக்கரில் போட்டு ஓட்டு மொத்த கலவையயும்  நன்றாக கலக்கவும்  குக்கரை மூடி தேவையான  அளவு விசில் வைத்து வேக   விடவும் . 

                           

  பிரியாணி தயாரானதும் அதனை பரிமாறும் பாத்திரத்தில் வைத்து உங்களுக்கு பிடித்த பொருட்களை கொண்டு அலங்கரிக்கவும், இப்போது உங்கள் சுவையான (Kaadai Briyani recipe) காடை பிரியாணி தயார் !!!                                    

                                       
காடை பிரியாணி Kaadai Briyani recipe  in tamil
  Kaadai Briyani recipe  in tamil


Share this post
                                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thanks for your comments,come again...

Recent posts

Thanks for your visiting, Come again regularly