லட்டு ( பூந்தி )
லட்டு என்றாலே பிடிக்காதாவர்களே இருக்க வாய்ப்பில்லை, இனிப்பு வகைகளில் இன்றியமையாத லட்டு வை ( Laddu recipe ) வீட்டிலேயே சுலபமாக செய்து பார்க்கலாம் வாங்க :
 |
Laddu recipe, Laddu seivathu eppadi |
தேவையான பொருட்கள் :
கடலை மாவு = 1 கப்
அரிசி மாவு = 1 ஸ்பூன்
சோடா உப்பு = 1 ஸ்பூன்
எண்ணெய் = தேவையான அளவு
பாகு காய்ச்ச :
சர்க்கரை = 2 கப்
தண்ணீர் = 3/4 கப்
முந்திரி,திராட்சை = 50 கிராம்
கல்கண்டு = 1ஸ்பூன் (தேவை எனில்)
கிராம்பு = 4 பீஸ்
ஜாதிக்காய் = ஒரு சிறிய துண்டு
ஏலக்காய் தூள் = 1 ஸ்பூன்
குங்குமப்பூ = 1/4 டஸ்பூன்
குங்குமப்பூ கலர் = சிட்டிகை
பச்சைக் கற்பூரம் = சிறிது
நெய் = 1 ஸ்பூன்
செய்முறை : 1
முதலில் சர்க்கரையையும், தண்ணீரையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். கம்பி பதம் அளவு பாகு வைக்க வேண்டும். பாகை எடுத்து ஒரு தட்டில் வைத்தால் அது முத்து போல் அப்படியே இருக்க வேண்டும். அதுதான் பதம். உடனே அடுப்பை அணைத்துஇறக்கி விடவும். இதற்கு மேல் வைத்தால் பாகு. இறுகி விடும்.
செய்முறை : 2
இதில் குங்குமப்பூ கலர், குங்குமப் பூ, ஏலக்காய் தூள், பச்சைக் கற்பூரம், கிராம்பு, ஜாதிக்காய் எல்லாவற்றையும் அரை டீஸ்பூன் நெய்யில் சேர்த்து வறுத்து பொடித்துக் கொள் ளவும். இதனுடன் முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
செய்முறை : 3
பூந்தி செய்ய:
கடலைமாவு, அரிசிமாவு, சோடா உப்பு உடன் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணையை காய வைக்கவும். நிறைய எண்ணை வேண்டும். அப்போதுதான் பூந்தியின் வடிவம் உருண்டையாக வரும்.
செய்முறை : 4
பூந்தி கரண்டியில் ஒரு ஸ்பூன் மாவை ஊற்றித் தேய்த்தால் பூந்திகள் காயும் எண்ணையில் விழும். முழுவதுமாக பொரிய விடாமல் அரை வேக்காடு பதத்தில் எடுத்து விடவும். பூந்திகள் சிறிது ஆறியதும் பாகில் போடவும். இப்படியே மாவு எல்லாவற் றையும் பூந்திகளாக்கி பாகில் போட்டு கிளறவும். வெதுவெதுப்பான சூட்டிலேயே இவற்றை சிறிது சிறிதாக எடுத்து உருண்டைகளாகப் பிடிக் கவும். ஆறிவிட்டால் பிடிக்க வராது.
இப்போது இனிப்பான லட்டு ( பூந்தி ) ( Laddu recipe ) தயார்!!!
Share this post